சென்னை மாரத்தான்: போக்குவரத்து மாற்றம்...!

50பார்த்தது
சென்னை மாரத்தான்: போக்குவரத்து மாற்றம்...!
சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளதுஇது தொடர்பாக பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42. 195 கிமீ. 32. 186 கிமீ, 21. 097 கிமீ மற்றும் 10 கிமீ) “FRESH WORKS CHENNAI MARATHON” ஓட்டம் நடைபெறுவதை முன்னிட்டு 06. 01. 2023 சனிக்கிழமை காலை 04. 00 மணி முதல் நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை மாரத்தான் ஓட்டம் காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர். டி. ஜி. எஸ். தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ. எம். ஆர். , கே. கே. சாலை, இ. சி. ஆர். வழியாக சென்றடையும்இந்நிகழ்ச்சி தொடர்பாக கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. * அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு. வி. க. பாலம், டாக்டர். டி. ஜி. எஸ். தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கபட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி