35 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் புதுவை, காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவை இதில் அடக்கம்.