ஞாயிற்றுகிழமையான இன்று (பிப். 02) தமிழகத்தில் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை நாளான இன்று அலுவலகங்கள் செயல்படுகின்றன. இன்று பணியாற்றும் பத்திரப்பதிவு ஊழியர்களுக்கு வேறு ஒரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை செய்யப்படும் ஆவணப்பதிவுக்கு விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும்.