மாத்திரைகளின் விலையை உயர்த்தியது மத்திய அரசு

55பார்த்தது
மாத்திரைகளின் விலையை உயர்த்தியது மத்திய அரசு
மத்திய அரசு சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 54 மருந்துகளின் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் சிட்டாக்ளிப்டின், லினாக்ளிப்டின், மெட்ஃபோர்மின் மாத்திரைகளின் விலை ரூ.15ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் பயன்படுத்தும் டெல்மிசார்டன், குளோர்தாலிடோன் மற்றும் சில்னிடிபைன் மாத்திரையின் விலை ரூ.7.14 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கொலஸ்ட்ரால் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி