பீகார் மாநிலத்திற்கு திட்டங்களை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளதாக திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, தேர்தல் நடைபெறும் டெல்லியையும், தேர்தலை சந்திக்க உள்ள பீகாரையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டினார்.