பல்வேறு வகையான சிப்ஸ்கள் இருந்தாலும் பலரும் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். உருளைக்கிழங்கு சிப்ஸில் கிட்டத்தட்ட அதிகமான சோடியம் காணப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், தூக்கமின்மை, வறண்ட சருமம், சிறுநீரக நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. உருளைக்கிழங்கு சிப்ஸை அதிக எண்ணெயில் ஆழமாக பொரிப்பதும் பல்வேறு உடல் நலப்பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.