பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் தற்போது புதிய படம் ஒன்றை தயாரித்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் தலைப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.