வடிவேலு காமெடியில் பேருந்தில் இடம்பிடிக்க நடிகர் போண்டா மணி பாம்பை போடுவார். அந்த வகையில், பொள்ளாச்சியில் அரசு பேருந்தில் சீட் பிடிப்பதற்காக இருக்கையில் 2 வீச்சரிவாள்கள் வைத்த மர்ம நபர்களால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் பேருந்து நிலையத்திலும் மற்ற பயணிகளுக்கு இடையேயும் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.