பஞ்சாப்: லூதியானாவில் ஆம் ஆத்மி நிர்வாகியும் தொழிலதிபருமான அனோக் மிட்டலுக்கு (35) பிரதிக்ஷா (24) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதை அவரது மனைவி லிப்சி மிட்டல் கண்டுப்பிடித்த நிலையில், அவரை கொலை செய்ய அனோக் தனது கள்ளக்காதலியுடன் சதி திட்டம் தீட்டியுள்ளார். கூலிப்படையினருக்கு ரூ.2.5 லட்சம் பணம் கொடுத்து லிப்சியை கொலை செய்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வர அனோக், அவரது காதலி, கூலிப்படையினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.