ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். முடிகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த பாண்டிரி கவுதம் (21) என்பவர் தனது நண்பர் விக்டரி வினய் என்பவருடன் இன்னோவா காரில் வாரங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அரிம்புலா கிராமத்தின் புறநகர் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வினய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கவுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.