வெளியானது கேப்டன் மில்லர் பர்ஸ்ட் லுக்

351பார்த்தது
வெளியானது கேப்டன் மில்லர் பர்ஸ்ட் லுக்
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இத்திரைபடத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. போர்க்களத்தில் தனுஷ் துப்பாக்கியுடன் நிற்பது போல இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஷிவ் ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் மற்றும் ஆர்ஆர்ஆர் புகழ் எட்வர்ட் சோனென்ப்ளிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி