புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு பின் முதன்முறையாக தனது உடல்நலம் குறித்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் எனக்கு தற்போது புற்றுநோய் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். இது உங்கள் வேண்டுதல் மூலம் கிடைத்த வெற்றி. மீண்டும் திரும்பி வருவேன், இரடிப்பு சக்தியுடன் வருவேன். உங்கள் ஆசீர்வாதத்தால் நான் நன்றாக இருப்பேன். எனது மனைவி கீதா அன்பாக கவனித்து கொண்டார். லவ் யூ ஆல்' என்று கூறியுள்ளார்.