தமிழக மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் அவ்வப்போது ஆய்வுகள் மேக்கொள்ளும். இதன் பயனாக கடந்த 9 மாதங்களில் விதியை மீறி செயல்பட்டு வந்த 219 மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 381 மருந்து விற்பனையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்து வந்த 21 மருந்து விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை வெளியாகியுள்ளது.