பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் அல்லது பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பிகள் ஆகிய இருவருக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 40 வயதை கடந்த பின் ஆண்டுக்கு ஒருமுறை இவர்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாலின மாற்று ஹார்மோன் தெரபி செய்து கொண்டவர்கள் அறுவை சிகிச்சை செய்து 5 வருடங்கள் கழித்து மேமோகிராபி சோதனை செய்து கொள்வது அவசியம்.