ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏறி, இறங்கி வருகிறது. தங்கத்தின் தேவை அதிகரிப்பு, போர்ப்பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பண்டிகை காலம் என்பதால் தங்கம் வாங்க காத்திருந்த மக்கள், விலை உயர்வால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடுத்தர மக்களால் ஒரு குண்டுமணி அளவு தங்கம் கூட வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.