கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் விபத்தில் பலி

60பார்த்தது
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கபிலர் மலை அருகே கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.14 வயதான சுதர்சனம் காரை ஓட்ட 17 வயதான லோகேஷ் உடன் சென்றுள்ளனர். சிறுவர்கள் அதிவேகமாக ஓட்டி சென்ற கார், சாலையில் சென்ற ஃபார்சூனர் கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியதில் சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி