பஸ் பாஸ்: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

56பார்த்தது
பஸ் பாஸ்: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸை காட்டி மாணவர்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்துக்கு துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில் போக்குவரத்துத்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்த பின் ஒட்டுமொத்தமாக மாணவர்களை கணக்கெடுத்து பஸ்பாஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளி அடையாள அட்டை பஸ்பாஸ் உள்ளிட்டவற்றை காண்பித்து பேருந்தில் பயணிக்கலாம் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி