நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு மூளை பாதிப்பு

75பார்த்தது
நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு மூளை பாதிப்பு
நடிகர் ஃபஹத் ஃபாசில் தனக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தனக்கு (ADHD) எனப்படும் கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி சிண்ட்ரோம் என்ற நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “எனக்கு டயலாக் பேச மட்டும்தான் தெரியும். ஒரு மேடையில் என்ன பேச வேண்டும் என்ற பக்குவமோ, உணர்வோ எனக்கு இல்லை என்று என் மனைவியும் அம்மாவும் அடிக்கடி சொல்வார்கள். எனக்கு இந்த பாதிப்பு இருப்பது 41 வயதில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய அளவிலான பாதிப்புதான் எனக்கு உள்ளது என வெளிப்படுத்தியுள்ளார்.

கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும், இது பொதுவாக குழந்தைகளிலும் அரிதாக பெரியவர்களிலும் ஏற்படுகிறது. எதிலும் கவனம் செலுத்த முடியாது. அதிகப்படியான உடல் செயல்பாடு. வயதுக்கு ஏற்ற வகையில் நடத்தையை கட்டுப்படுத்த முடியாமல் போவதே இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி