இந்தியாவில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவை கட்டணங்களை உயர்த்தியதால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறியுள்ளனர். இதன் காரணமாக, அந்நிறுவனங்களுக்கு போட்டியாக 5ஜி சேவை வழங்கப்பட உள்ளது.