தலித் சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் (வீடியோ)

1078பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு தலித் சிறுவன் திருடியதற்காக கிராம மக்களால் கடுமையாக தாக்கப்பட்டான். பின்னர் அந்த சிறுவனை, பொதுமக்கள் மற்றும் மற்ற சிறுவர்கள் இணைந்து கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர். பின்னர் அந்த சிறுவன் கிராமத்தினரின் பிடியில் இருந்து தப்பி தன் தாயுடன் சேர்ந்தான். தாயிடம் நடந்ததை கூறியதையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.