அண்ணன் வைகோ விரைவில் குணமடையவேண்டும்.. சீமான்

74பார்த்தது
அண்ணன் வைகோ விரைவில் குணமடையவேண்டும்.. சீமான்
கால் தவறி கீழே விழுந்து தோள்பட்டையில் காயம்பட்ட நிலையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ள வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "மதிமுகவின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்கள் தவறி விழுந்ததில் காயமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அண்ணன் விரைவில் முழு உடல்நலம் பெற்று, அரசியல் பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன்."என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி