மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமில்லாமல், ஆண்களுக்கும் ஏற்படலாம். குறைந்த விழிப்புணர்வு, அலட்சியமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்களை விட ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பெண்களை ஒப்பிடும்பொழுது 25% வரை அதிக இறப்பை ஆண்கள் மார்பக புற்றுநோயால் சந்திக்கின்றனர் என்கிறது ஆய்வு முடிவுகள். மார்பகம், அக்குளில் அடிக்கடி கட்டி தோன்றினால் உடனடியாக மருத்துவரை கலந்தலோசிப்பது அவசியம்.