தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும், அமலாக்கத்துறை மீதும் பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு. செய்யப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய திலக் நகர் போலீசாருக்கு பெங்களூரு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.