BREAKING: அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்

107757பார்த்தது
BREAKING: அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. (த.வெ.க). இனி முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என நடிகர் விஜய் அறிவித்துள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சி போட்டியிடும் என்றும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை யாருக்கு ஆதரவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'என்னை பொறுத்தவரை அரசியல் மற்றொரு தொழில் அல்ல, அது ஒரு புனிதமான மக்கள் பணி' என விஜய் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி