லால் சலாம் படத்தை வெளியிட தடைக்கோரி புகார் மனு

81பார்த்தது
லால் சலாம் படத்தை வெளியிட தடைக்கோரி புகார் மனு
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலரான ஆர்டிஐ செல்வம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். லால் சலாம் படத்தில் நடித்துள்ள நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இதனால் அவர் நடித்துள்ள படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மனுவில் கூறியுள்ளார்.