தமிழகத்தில் உள்ள சுமார் 31 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப் படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன்பெற உள்ளனர். இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை நடைமுறை படுத்த உரிய வசதிகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.