மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டம் ஜவ்ரா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறவிருந்தது. அப்போது மணமகன் குடும்பத்தை சேர்ந்த தம்பதி தனது மகனுடன் திருமணத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (பிப்.18) இரவு 8 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மந்திரபாத்தில் விளையாடிக்கொண்டிருந்த கோபு சக்யா என்ற சிறுவனை சுட்டுவிட்டு தப்பிச்சென்றார். இதில் சிறுவன் உயிரிழந்த நிலையில் கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.