ரயிலுக்கு அடியில் சிக்கி 100 கி.மீ பயணம் செய்த சிறுவன் (வீடியோ)

53பார்த்தது
உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுவன் சரக்கு ரயிலின் சக்கரங்களுக்கு அடியில் 100 கிலோ மீட்டர் பயணம் செய்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையம் அருகே வசிக்கும் சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் சக்கரங்களில் அமர்ந்திருந்தான். அந்த நேரம் ரயில் நகரத் தொடங்கியதால் பயத்தில் சிறுவன் சக்கரத்திலேயே அமர்ந்து சுமார் 100 கி.மீ பயணம் செய்தான். பின்னர் அவனை கண்ட ஆர்பிஎஃப் வீரர்கள் அவனை பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி