காங்கிரஸ்க்கு வாக்களித்தால் பாஜகவுக்கு வெற்றி.. மம்தா

85பார்த்தது
காங்கிரஸ்க்கு வாக்களித்தால் பாஜகவுக்கு வெற்றி.. மம்தா
18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மால்டா நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த நேரத்தில், நீங்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் காங்கிரஸுக்கும், இடதுசாரிகளுக்கும் வாக்களித்தால் பாஜக வெற்றி பெறும். இந்த இரண்டு கட்சிகளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளன என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி