பீகார் பாஜக எம்எல்ஏ ஸ்ரேயாசி சிங் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். இவர் தற்போது ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று வருகிறார். மானவ் ரச்னா சர்வதேச பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார். 2020 தேர்தலில் ஜமுய் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.