காதல் மனைவியை கழட்டிவிட்டு தலைமறைவான கணவர்

564பார்த்தது
காதல் மனைவியை கழட்டிவிட்டு தலைமறைவான கணவர்
விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரண்யாவும் (22), அரிதாஸும் (24) 2021ஆம் ஆண்டு காதலித்து வந்துள்ளனர். அதில், சரண்யா கர்ப்பமடைந்துள்ளார். 5 மாதம் கர்ப்பத்தை அவருக்குத் தெரியாமல் மாத்திரை கொடுத்து அரிதாஸ் கலைத்துவிட்டார். பின்னர் போலீசில் புகார் அளித்த நிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. 2 நாட்கள் மட்டும் சரண்யாவுடன் இருந்த அரிதாஸ் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் இன்றுவரை வீடு திரும்பவில்லை. இதனைக் கேட்டதற்கு அரிதாஸின் பெற்றோர் தாக்கியுள்ளனர். இதனால், இன்று (எப்ரல் 2) அரிதாஸின் பெற்றோர் வீட்டில் சரண்யா தர்ணாவில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி