நூதன வாக்கு சேகரிப்பில் பாஜக நிர்வாகி

78பார்த்தது
நூதன வாக்கு சேகரிப்பில் பாஜக நிர்வாகி
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடித்துள்ள அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் வசிக்கும் நந்திகாந்தி நரசிம்மலு என்பவரின் மகனுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு கொடுக்க அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் விலை உயர்ந்த பரிசு பொருட்கள், மொய் எதுவும் கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக உங்களது வாக்குகளை மோடிஜி-க்கு அளித்து அவரை பிரதமராக்குங்கள் என அச்சடித்து விநியோகம் செய்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி