மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, மத்திய பட்ஜெட்டில் 2ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கான நிதியை NDA அரசு ஒதுக்கவில்லை. பெருமழை வெள்ளத்தின் போது தூத்துக்குடி வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ராமர் கோயில் கட்டியும் அயோத்தியில் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை என பேசினார்.