பூண்டில் எந்த அளவு மருத்துவ குணம் உள்ளதோ அதே அளவு அதன் தோலிலும் உள்ளது. சிலருக்கு தலைக்கு குளித்தாலே சளி, தும்மல் வரும். தலைக்கு குளித்ததும் சாம்பிராணி தூபம் போடும்போது அதில் சிறிது காய்ந்த பூண்டு தோலை போட உடனடி பலன் கிடைக்கும். டீ தயாரிக்கும்போது பூண்டு தோலை சேர்த்து கொதிக்க விட, நல்ல மணமும் ருசியும் கிடைக்கும். தலைபாரம், மண்டையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றிற்கு பூண்டு தோல் புகை நல்லது.