நாம் அடிக்கடி சாப்பிடும் பல உணவுகளில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நமது உடலின் ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு உதவுகிறது. வெங்காயத்தை சாப்பிடுவதை தவிர்த்தால் உடலில் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே வெங்காயம் சாப்பிட பிடிக்காதவர்கள் அதனை முற்றிலுமாக நிறுத்துவதை விட குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.