இஞ்சியை அதிகாலையில் உட்கொள்வதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டீ மற்றும் வெந்நீருடன் சேர்க்கப்படும் இஞ்சி, குமட்டல் மற்றும் காலை சோம்பலை போக்குவதாக கூறப்படுகிறது. மேலும் இஞ்சி, பால், மஞ்சள் மூன்றையும் சேர்த்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காலை உணவில் சிறிது இஞ்சி சேர்த்துக் கொண்டால், வாதநோய், மூட்டுவலி குறையும். இஞ்சி சாறு குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். வாயுத்தொல்லை போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.