புதுச்சேரியில் பீர் திருவிழா.. மதுபிரியர்கள் உற்சாகம்!

34945பார்த்தது
புதுச்சேரியில் பீர் திருவிழா.. மதுபிரியர்கள் உற்சாகம்!
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறது. விதவிதமான இசை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டை கொண்டாட புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனிடையே, புதுச்சேரியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதத்தில் பீர் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிலும், ரோஜா இதழ், பூசணிப் பழம், வெட்டிவேர் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பீர்கள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. வாடிக்கையாளர் இந்த புதுவகையான பீர்களை சுவைத்து மகிழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி