தேர்தல் தேதிகளில் கட்சி விளம்பரம் வெளியிட தடை

52பார்த்தது
தேர்தல் தேதிகளில் கட்சி விளம்பரம் வெளியிட தடை
தமிழ்கத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி செய்திதாள்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் வாக்குப்பதிவு அன்றும் (ஏப்ரல் 19) அதற்கு முன் தினமும்(ஏப்ரல் 18) விளம்பரம் வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தவறாக வழிநடத்தும் வகையிலான விளம்பரங்கள் கடந்த காலங்களில் வெளியிடப்பட்டதால், இந்த தடை விதிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி