தேர்தல் கல்யாணம்னா அதிமுக தான் மாப்பிள்ளை - செல்லூர் ராஜூ

64பார்த்தது
தேர்தல் கல்யாணம்னா அதிமுக தான் மாப்பிள்ளை - செல்லூர் ராஜூ
மதுரையில் கத்தோலிக்க பேராயர் அந்தோணி பாப்புசாமியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு கேட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். கல்யாணத்திற்கு உறவினர்கள் வருவதுபோல தேர்தல் என்றால் தலைவர்கள் வரத்தான் செய்வார்கள். ஆனால் கல்யாணத்தில் மாப்பிள்ளை யார் என்பது தான் முக்கியம். அந்த வகையில் இந்த தேர்தலில் அதிமுக தான் மாப்பிள்ளை” என்றார்.

தொடர்புடைய செய்தி