பாம்புடன் புகைப்படம் எடுத்த இளைஞர் பலி

81பார்த்தது
பாம்புடன் புகைப்படம் எடுத்த இளைஞர் பலி
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் பிறந்தநாளில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்தார். சிகாலி அருகே கஜானன் நகரில் வசிக்கும் சந்தோஷ் ஜக்டேல் (31), தனது பிறந்தநாளையொட்டி தனது நண்பர்கள் ஆரிப் கான் மற்றும் தீரஜ் பண்டிட்கர் ஆகியோருடன் வெளியே சென்றுள்ளார். அப்போது பாம்பை பிடித்து அதனை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்குமாறு நண்பர்கள் வற்புறுத்தியுள்ளனர். பாம்புடன் புகைப்படம் எடுக்க முயன்றபோது பாம்பு கடித்து சந்தோஷ் பலியானார்.

தொடர்புடைய செய்தி