உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சிந்து, 21-12, 21-9 என்ற நேர் செட் கணக்கில் உன்னாதி ஹீடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். அதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த லக்சயா சென், 21-14 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ஷோகோ ஒகாவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.