அவதார் 6, 7-ம் பாகங்கள் ஜேம்ஸ் கேமரூன் தகவல்

80பார்த்தது
அவதார் 6, 7-ம் பாகங்கள் ஜேம்ஸ் கேமரூன் தகவல்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து கடந்த 2022இல் இந்த படத்தின் இரண்டாம் பாகம், அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் வெளியானது. இதுவும் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவதார் படத்தின் 5 பாகங்களுக்குரிய ஸ்க்ரிப்ட்டை முழுமையாக எழுதிவிட்டோம். 6 மற்றும் 7 ஆகிய பாகங்களுக்கான ஐடியா தன்னிடம் இருப்பதாகவும் அதனை செயல்படுத்தவும் முயற்சிகள் எடுத்து வருகிறோம் என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி