சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதால் குடும்பத்தின் தரித்திர நிலை நீங்கி, செல்வங்கள் பெருகும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத நபர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வீணாக ஏற்படும் பண செலவுகள் நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். காரிய தடைகள் நீங்கி, எடுக்கும் அனைத்து முயற்சியிலும் வெற்றி உண்டாகும்.