இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 8 வாரம் கால அவகாசம் கோரி சூரிய மூர்த்தி என்பவர் தொடர்ந்த மனு மீது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பதில் தனக்கு வழங்காத நிலையில் விரிவான பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என மனுதாரர் சூரியமூர்த்தி தெரிவித்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.