ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலினிடம், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுமா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "திமுக அல்ல.. திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆகையால், “இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என பதிலளித்துள்ளார். இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட உள்ளது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.