பள்ளி மீது தாக்குதல்.. 35 பேர் பலி

8454பார்த்தது
பள்ளி மீது தாக்குதல்.. 35 பேர் பலி
காசாவில் உள்ள பள்ளி மீது இஸ்ரேலிய விமான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 35 பேர் பலியாகியுள்ளனர். மத்திய காசாவில் உள்ள ஐ.நா.வுடன் இணைந்த பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நுசெரத் அகதிகள் முகாமில் உள்ள பள்ளியின் மேல் தளத்தை இஸ்ரேல் போர் விமானங்கள் இரண்டு ஏவுகணைகள் மூலம் தாக்கின. பள்ளி வளாகத்தில் உள்ள ஹமாஸ் மையத்தை தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி