ஆசிய கிரிக்கெட் கவுன்சில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அனுசரணையில் 1984 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆண்கள் கிரிக்கெட்டில் முதல் ஆசிய கோப்பையை ஏற்பாடு செய்தது. இந்த போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்றாலும், சில நேரங்களில் இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. இதுவரை 14 ஆசியக் கோப்பைகளில் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய ஒரே அணி இலங்கை. இந்தியாவும் பாகிஸ்தானும் தலா 13 முறை ஆசிய கோப்பையில் பங்கேற்றுள்ளன.