ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதியில் ஒரு வார காலமாக இரவு நேரங்களில் வீடுகளின் மீது ஒருவர் கற்களை வீசி வந்துள்ளார். அவரை தேடும்போது அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்று மாயமாகி விடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு கல்லெறிந்த ஆசாமியை பொதுமக்கள் பிடித்தனர். அவர் அதே ஊரைச் சேர்ந்த நிர்மல் ராஜ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.