காலையில் கைது.! மாலையில் ஜாமினில் வெளியே வந்த ராஜேஷ் தாஸ்.!

74பார்த்தது
காலையில் கைது.! மாலையில் ஜாமினில் வெளியே வந்த ராஜேஷ் தாஸ்.!
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது விழுப்புரம் நீதிமன்றம் 3 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் அவரது முன்னாள் மனைவி பீலா ராஜேஷின் வீட்டில் புகுந்து தாக்கிய வழக்கில் இன்று(மே 24) போலீசார் அவரை கைது செய்தனர். திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி