தமிழகத்தில் அதிகரித்த பீர் விற்பனை

12700பார்த்தது
தமிழகத்தில் அதிகரித்த பீர் விற்பனை
தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மே மாதத்தில் பீர் விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை 23,66,856 பீர் பாட்டில் அடங்கிய பெட்டிகளை விற்பனை செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 18,70,289 பீர் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 27 சதவீதம் அதிகம். தமிழகத்திலேயே பீர் விற்பனையில் காஞ்சிபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அடுத்து சேலம், திருப்பூர் இரண்டாவது, மூன்றாவது இடத்திலும் திருவள்ளூர் நான்காம் இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய செய்தி